Saim ayub
PAK vs BAN, 2nd Test: பந்துவீச்சில் அசத்திய வங்கதேசம்; 274 ரன்களில் ஆல் அவுட்டான பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் 6 பந்துகளை எதிர்கொண்ட அப்துல்லா ஷஃபிக் ரன்கள் ஏதுமின்றி தஸ்கின் அஹ்மதின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் சைம் அயூப்புடன் இணைந்த கேப்டன் ஷான் மசூத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Related Cricket News on Saim ayub
-
PAK vs BAN, 2nd Test: ஷான் மசூத் அரைசதம்; நிதானம் காட்டும் பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs BAN, 1st Test: சைம் அயூப், சௌத் ஷகீல் அரைசதம்; முதல் இன்னிங்ஸில் சமாளிக்கும் பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியானது 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: பாபர் ஆசாம் அரைசதம்; முல்தான் அணிக்கு 205 ரன்கள் இலக்கு!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: வேண்டர் டுசென் சதம் வீண்; லாகூரை வீழ்த்தி பெஷாவர் த்ரில் வெற்றி!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
பிஎஸ்எல் 2024: சைம் அயுப், ரோவ்மன் பாவெல் காட்டடி; கலந்தர்ஸ் அணிக்கு 212 ரன்கள் இலக்கு!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிபிஎல் 2023: ஜமைக்கா தலாவாஸை வீழ்த்தி கயானா அமேசான் வாரியர்ஸ் வெற்றி!
ஜமைக்கா தலாவாஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PSL 2023: மீண்டும் மிரட்டிய அயூப், பாபர் ஆசாம்; 242 ரன்களை குவித்தது பெஷாவர்!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெஷாவர் ஸால்மி அணி 243 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: மிரட்டல் சதமடித்த பாபர் ஆசாம்; பெஷாவர் அணி 240 ரன்கள் குவிப்பு!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: தாலத்; அஃப்ரிடி போராட்டம் வீண்; பெஷாவர் ஸால்மி அபார வெற்றி!
லாகூர் காலந்தர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24