Shamar joseph
பிரிஸ்பேன் டெஸ்டிற்கு முன்பாக பயிற்சிக்கு திரும்பிய கவாஜா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்தப் போட்டியின்போது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, வெஸ்ட் இண்டீஸ் அறிமுக வீரர் ஷமார் ஜோசவ் பந்துவீச்சில் தலையில் அடிபட்டது. அப்போது அவருக்கு ரத்தகசிவு ஏற்படவே, உடனடியாக மைதானத்திலிருந்து கவாஜா வெளியேறி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
Related Cricket News on Shamar joseph
-
AUS vs WI, 1st Test: ஷமார் ஜோசப் அபாரம்; மீண்டும் தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
முதல் பந்திலேயே விக்கெட்; சாதனைப் படைத்த ஷமர் ஜோசப்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப் 85 ஆண்டு கால சாதனை ஒன்றை சமன் செய்திருக்கிறார். ...
-
AUS vs WI, 1st Test: விண்டீஸை 188 ரன்களில் சுருட்டியது ஆஸி; ஸ்மித் ஏமாற்றம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்களைச் சேத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24