Shan masood abdullah shafique
ஷான் மசூத், அப்துல்ல ஷஃபிக் அரைசதம்; வலுவான நிலையில் பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணி கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்த நிலையில், அதில் பாகிஸ்தான் அணி வெற்றியைப் பதிவு செய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இமாம் உல் ஹக் 17 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஷஃபிக்குடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷான் மசூத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவு செய்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 57 ரன்களில் அப்துல்லா ஷஃபிக் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பாபர் ஆசாமும் 16 ரன்னில் விக்கெட்டை இழந்தார்,
Related Cricket News on Shan masood abdullah shafique
-
PAK vs ENG, 1st Test: பாகிஸ்தான் அணி 556 ரன்களில் ஆல் அவுட்; இங்கிலாந்து அதிரடி தொடக்கம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 460 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
அணிக்காக விளையாடுவது எப்போது அடுத்த நிலை உணர்வை தரும் - அப்துல்லா ஷஃபிக்!
அணிக்காக செயல்படுவது அடுத்த நிலை உணர்வு என்பதால், இப்போட்டியில் சதமடித்து அசத்தியதை மகிழ்ச்சியாக உணர்கிறேன் என பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷஃபிக் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs ENG, 1st Test: சதமடித்து மிரட்டிய ஷஃபிக், மசூத்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியானது 4 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
PAK vs ENG, 1st Test: ஷஃபிக், மசூத் அரைசதம்; வலுவான தொடக்கத்தை பெற்ற பாகிஸ்தான்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47