Tnpl
டின்பிஎல் 2021: ஜூலை 19 முதல் ஆரம்பமாகும் உள்ளூர் கிரிக்கெட் திருவிழா!
ஐபிஎல் போட்டிகளைப் போலவே ஒவ்வொரு மாநிலங்களும் ஊள்ளூர் அணிகளை வைத்து டி20 கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகின்றன. அதில் மிகவும் பிரபலமானது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடர். இதுவரை நான்கு சீசன்களைக் கடந்துள்ள இத்தொடரின் ஐந்தாவது சீசன் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் 8 அணிகள் பங்கேற்கும் 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை முதலில் நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. இப்போது இந்த போட்டி முழுமையாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு, இதற்கு தமிழ்நாடு அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
Related Cricket News on Tnpl
-
டிஎன்பிஎல் 2021: சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியில் சந்தீப் வாரியர்!
இலங்கை அணிக்கெதிரான தொடரில் இந்திய வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக உள்ள சந்தீப் வாரியர் நடப்பாண்டு டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2021: லைக்கா கோவை கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷாருக் கான் நியமனம்!
ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகியுள்ள தமிழ்நாடு வீரர் ஷாருக் கான், டிஎன்பிஎல் தொடரின் அணிகளில் ஒன்றான லைக்கா கோவை கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
கரோனா அச்சுறுத்தலால் டிஎன்பிஎல் தொடர் ஒத்திவைப்பு!
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47