With riyan
நாங்கள் 100 சதவீதம் நல்ல உடல்நிலையுடன் இல்லை - சஞ்சு சாம்சன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டம் நேற்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்க்ளைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ராஜத் பட்டிதார் 34 ரன்களையும், விராட் கோலி 33 ரன்களையும் சேர்த்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Related Cricket News on With riyan
-
ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : ஆர்சிபி அணியை வீழ்த்தி குவாலிஃபையருக்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஒரு அணியாக நாங்கள் சரியாக செயல்படவில்லை - சஞ்சு சாம்சன்!
இன்றைய போட்டியில் நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இது 160 ரன்களுக்கான ஆடுகளம். நன்றாக விளையாடியிருந்தால் நாங்கள் 160 ரன்களை தாண்டியிருப்போம் என தோல்வி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சாம் கரண் அசத்தல்; ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸை 144 ரன்களில் சுருட்டியது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் பேட்டர்கள் தடுமாற்றம்; சிஎஸ்கே அணிக்கு 142 ரன்கள் டார்கெட்!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 142 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எப்போதும் பொருமையாக இருப்பது எனது இயல்பு - புவனேஷ்வர் குமார்!
இன்றைய தினம் எங்கள் நல்ல ஸ்விங் கிடைத்தது. அது எங்கே ஸ்விங் ஆனது என்று சரியாக சொல்ல முடியவில்லை என ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: எதிரணி பந்துவீச்சாளர்களை பாராட்டிய சஞ்சு சாம்சன்!
நான் மற்றும் பட்லர் ஆகியோர் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த போதும் ஆட்டத்தை இறுதிவரை அழைத்துச் செல்ல உதவிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோருக்கு பாராட்டுகள் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் வெற்றியை தட்டிப்பறித்த புவி; ஒரு ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இறுதிவரை போராடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: தொடக்க வீரர் இடத்தில் விராட் கோலி; அதிரடி வீரருக்கு வாய்ப்பு?
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து. ...
-
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த விஜய் சங்கர் - வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் விஜய் சங்கர் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: சஞ்சு சாம்சன், ரியான் பராக் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 197 டார்கெட்!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உள்ளூர் கிரிக்கெட்டிலும் நான் இதனையே தான் செய்துவருகிறேன் - ரியான் பராக்!
இந்த வருடம் எனது இலக்கானது பந்தை பார்த்து அடிப்பது மட்டுமே. ஏற்கனவே சொன்னது போல் உள்நாட்டு கிரிக்கெட்டில் சரியாக இந்த இடத்தில் தான் பேட்டிங் செய்வேன் என்று ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47