T20 WC 2024: உலகக்கோப்பை தொடரின் சிறந்த லெவனை அறிவித்த ஆகாஷ் சோப்ரா!

Updated: Wed, Jul 03 2024 14:11 IST
Image Source: Google

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஒன்பதாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலியும், தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டு ஐசிசி மற்றும் முன்னாள் வீரர்கள் தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்னணையாளருமான ஆகாஷ் சோப்ரா தன்னுடைய சிறந்த டி20 உலகக்கோப்பை பிளேயிங் லெவனை அறிவித்துள்ளார்.

அதன்படி, அவர் தேர்வு செய்துள்ள அணியின் தொடக்க வீரர்களாக இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் ஆஃப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோரைத் தேர்வு சேய்துள்ளார். மேலும் இந்த அணிக்கான கேப்டனாகவும் ரோஹித் சர்மாவை நியமித்துள்ளார். மேற்கொண்டு பேட்டர்களாக வெஸ்ட் இண்டிஸின் நிக்கோலஸ் பூரன் மூன்றாம் இடத்திற்கும், இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் நான்காம் இடத்திற்கும், தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசென் 5ஆம் இடத்திற்கு தேர்வு செய்துள்ளார். 

 

மேலும் அணியின் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, சுழற்பந்துவீச்சாளச்ர்களாக ஆஃப்கானின் ரஷித் கான், வங்கதேசத்தின் ரிஷாத் ஹொசைன் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். மேற்கொண்டு அணியின் வேஎகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷிதீப் சிங் மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியொரைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த சிறந்த லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், நிக்கோலஸ் பூரன், சூர்யகுமார் யாதவ், ஹென்ரிச் கிளாசென், ஹர்திக் பாண்டியா. ரஷித் கான், ரிஷாத் ஹுசைன், ஜஸ்பிரித் பும்ரா, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, அர்ஷ்தீப் சிங்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை