சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்துடம் (ஐசிசி) டி20 உலக கோப்பை தொடர் இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு, ஐபிஎல்லை சில வீரர்கள் நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டனர்.

Advertisement

குறிப்பாக ஃபிட்னெஸ் கேள்விக்குறியாக இருந்த ஹர்திக் பாண்டியா, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அபாரமாக பேட்டிங் ஆடியதுடன், தனது முழு பந்துவீச்சு திறமையையும் நிரூபித்து காட்டினார். கேப்டன்சியிலும் அசத்தி, கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தினார். அதன்விளைவாக டி20 அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

Advertisement

தினேஷ் கார்த்திக், ராகுல் திரிபாதி ஆகிய பேட்ஸ்மேன்களும், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகிய பந்துவீச்சாளர்களும் அபாரமாக பந்துவீசி அசத்தினர். இவர்களில் திரிபாதியை தவிர மற்ற வீரர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்நிலையில், ஐபிஎல் 15ஆவது சீசனில் வீரர்கள் ஆடியதன் அடிப்படையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. இந்த சீசனில் ரோஹித், கோலி, ரிஷப் பந்த் ஆகிய மூவரும் சரியாக ஆடாததால் அவர்கள் மூவரையும் அணியில் எடுக்கவில்லை. 

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் அவர் தேர்வு செய்துள்ள அணியில் கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய வீரர்கள் தவிர ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், குல்தீப் யாதவ், சாஹல் ஆவேஷ் கான் ஆகிய வீரர்களையும் அவர் தேர்வு செய்துள்ளார். 

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த டி20 உலகக்கோப்பை இந்திய அணி: கேஎல் ராகுல், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தினேஷ் கார்த்திக், க்ருணல் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News