ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடந்து முடிந்த ஐபிஎல் 2025 சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக 18ஆண்டு தவத்திற்கு பிறகு ஆர்சிபி அணியானது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது அந்த ரசிகர்களை நிம்மதியடைய வைத்துள்ளது. 

Advertisement

அதேசமயம் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பல இளம் அறிமுக வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமில்லாத வீரர்களை உள்ளடக்கி இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ஒரு ஐபிஎல் அணியை உருவாக்கியுள்ளார். இதில் பல பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. 

Advertisement

அந்தவகையில் ஆகாஷ் சோப்ரா தனது அணியின் தொடக்க வீரர்களாக பஞ்சாப் கிங்ஸின் பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார். இவர்கள் இவரும் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் முக்கிய பங்கினை வகித்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து மூன்றாம் வரிசையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 14 வயது பேட்டர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளித்துள்ளார். 

அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டர் வீரர்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் நெஹல் வதேரா மற்றும் ஷஷாங் சிங், மும்பை இந்தியன்ஸின் நமன் தீர் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ள அவர், அணியின் கேப்டனாக ஷஷாங்க் சிங்கை நியமித்துள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் ஆல் ரவுண்டராக டெல்லி கேப்பிட்டல்ஸின் விப்ராஜ் நிகாமையும், அணியின் சுழற்பந்து வீச்சாளராக பஞ்சாப் கிங்ஸின் ஹர்பிரீத் பிராரையும் தேர்ந்தெடுத்துள்ளார். 

இதில் விப்ராஜ் சிங் இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தேர்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதேசமயம் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக யாஷ் தயாள் (ஆர்சிபி), விஜய் குமார் வைஷாக் (பஞ்சாப் கிங்ஸ்), அன்ஷுல் காம்போஜ் (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஆகியோரை ஆகாஷ் சோப்ரா தனது அணியில் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

Advertisement

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஐபிஎல் 2025 அன்கேப்டு லெவன்: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங் (கேப்டன்), நமன் தீர், விப்ராஜ் நிகம், ஹர்பிரீத் ப்ரார், யாஷ் தயாள், விஜய் குமார் வைஷாக், அன்ஷுல் கம்போஜ்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News