இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒர்நாள் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. 

Advertisement

இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இப்ராஹிம் ஸத்ரான் தலைமையிலான இந்த அணியில் ரஷித் கான் இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் மற்றொரு நட்சத்திர வீரரான முஜீப் உர் ரஹ்மானும் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் இலங்கை அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வநிந்து ஹசரங்கா தலைமையிலான இந்த அணியில் அனுபவ வீரர்கள் எஞ்சலோ மேத்யூஸ், குசால் பெரேரா, தசுன் ஷனகா ஆகியோருக்கு அணியில் இடம்கிடைத்துள்ளது. அதேபோல் மதீஷா பதிரானா, தில்சன் மதுஷங்கா, மஹீஷ் தீக்‌ஷனா, பினுரா ஃபெர்னாண்டோ ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். 

ஆஃப்கானிஸ்தான் அணி: இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், முகமது இஷாக் ரஹிமி, ஹஸ்ரத்துல்லா ஸஸாய், குல்பதின் நைப், முகமது நபி, நஜிபுல்லா ஸத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், கரீம் ஜானத், ஷரஃபுதீன் அஷ்ரஃப், ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஃபரீத் அஹ்மத், நவீன்-உல்-ஹக், நூர் அகமது, வஃபாதர் மொமண்ட், கைஸ் அகமது.

இலங்கை அணி: வனிந்து ஹசரங்கா (கேப்டன்), சரித் அசலங்கா (துணை கேப்டன்), பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, குசல் பெரேரா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகாஅ, மஹீஷ் தீக்ஷனா, பினுர ஃபெர்னாண்டோ, மதீஷா பதிரனா, தில்ஷன் மதுஷங்கா, நுவான் துஷார, அகில தனஞ்சய, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News