ஆஃப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து முன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்றைய தினம் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இனை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவு செய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் சதத்தை நெருங்கிய குர்பாஸ் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 92 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத் தொடர்ந்து 7 பவுண்டரிகளுடன் 60 ரன்களை எடுத்திருந்த ஸத்ரானும், அடுத்து வந்த சஹிதுல்லா 10 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதேசமயம் இந்த இன்னிங்ஸில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த செதிகுல்லா அடல் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். 

இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 210 ரன்களைக் குவித்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிராட் எவன்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் ஒருபக்கம் சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்க, மறுமுனையில் தியான் மேயர்ஸ், பிராண்டன் டெய்லர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அதன்பின் பென்னெட்டுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சிக்கந்தர் ரஸாவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் பிரையன் பென்னெட்  பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய கேப்டன் சிக்கந்தர் ரஸாவும் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

Also Read: LIVE Cricket Score

 அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ரியான் பர்ல் 37 ரன்களிலும், முசெகிவா 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் அப்துல்லா அஹ்மத்ஸாய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News