இந்திய ஏ அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முதால் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி வெற்றிபெற்று அசத்திய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியானது மெல்போர்னில் நடதது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய ஏ அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.  இதில் துருவ் ஜுரெல் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடியதுடன் அதிகபட்சமாக 80 ரன்கள் அடித்தார். இதனால் இந்திய ஏ அணியானது 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளையும், பியூ வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

Advertisement

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணியில் மெக்ஸ்வீனி 14 ரன்களிலும், கேமரூன் பான்கிராஃப்ட் 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கஸ் ஹாரிஸ் அரைசதம் கடந்த நிலையில் 74 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ரோக்கிசியோலி 35 ரன்களையும், பெர்சன் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 62 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய ஏ அணியில் அபிமன்யூ ஈஸ்வர்ன் 17, சாய் சுதர்ஷன் 3,கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 11, கேஎல் ராகுல் 10 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்த நிலையில், இந்திய ஏ அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை மட்டுமே எடுத்தது. இன்று தொடங்கிய மூன்றாம் நாள் அட்டத்தை துருவ் ஜூரெல் 19 ரன்களுடனும், நிதீஷ் ரெட்டி 9 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர்.

இதில் சிறப்பாக விளையாடிய துருவ் ஜூரெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு 68 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதமடிப்பார் என எதிர்பார்கப்பட்ட நிதீஷ் ரெட்டி 38 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் பிரஷித் கிருஷ்ணா 29 ரன்னிலும், தனுஷ் கோட்டியான் 44 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, இந்திய ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 229 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ரோக்கிசியோலி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு 168 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது.

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய ஏ அணியில் மார்கஸ் ஹாரிஸ் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோர் பிரஷித் கிருஷ்ணா வீசிய முதல் ஓவரின் அடுத்தடுத்து முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரர் நாதன் மெக்ஸ்வீனியும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலிய ஏ அணி 48 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த சாம் கொண்ஸ்டாஸ் மற்றும் ஒலிவியர் டேவிஸ் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 

Advertisement

இதில் ஒலிவியர் டேவிஸ் 21 ரன்னில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அபாரமாக விளையாடிய சாம் கொண்ஸ்டாஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய பியூ வெப்ஸ்டரும் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாம் கொண்ஸ்டாஸ் 73 ரன்களையும், பியூ வெப்ஸ்டர் 46 ரன்களையும் சேர்க்க, ஆஸ்திரேலிய ஏ அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய ஏ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இந்த தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News