ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. அதேசமயம் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது  டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ளது. 

Advertisement

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே (நான்காவது) டெஸ்ட் போட்டியானது நாளை (டிசம்பர் 26) மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளது. மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்கு இப்போட்டில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும். 

Advertisement

அதிலும் இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் வென்றால் மட்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற அழுத்ததிற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டிக்காக இரு நி வீரர்களும் திவீரமாக தயாராகியும் வருகின்றன்ர். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாட் கம்மின்ஸ் தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய ஹேசில்வுட்டிற்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார். மேற்கொண்டு கடந்த போட்டியின் போது காயமடைந்த நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட்டும் காயத்தில் இருந்து மீண்டு தனது இடத்தை உறுதிசெய்துள்ளார். 

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஸ்காட் போலண்ட்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கே), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, தனூஷ் கோட்டியான்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News