இந்தியாவில் ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், அடுத்த மாதம் 5ஆம் தேதி தொடங்க இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகள் ஏறக்குறைய அனைத்தும் முடிவடைந்த நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் நெதர்லாந்து அணியை தவிர, மற்ற ஒன்பது அணிகள், உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக, ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வந்தன. 

Advertisement

நடப்பு உலகக் கோப்பையில் விளையாட இருக்கும் ஆசிய அணிகளான, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் என 5 அணிகள் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்றன. இதேபோல தென் ஆப்பிரிக்க மண்ணில் ஆஸ்திரேலியா அணி அவர்களை ஒருநாள் கிரிக்கெட்டில் சந்தித்தது. இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அவர்களது மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் எதிர்த்து விளையாடியது.

Advertisement

இதற்கு அடுத்து இந்த அணிகளில் சில அணிகள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத இருக்கின்றன. குறிப்பாக இந்தியா உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் ஐசிஐசிஐ ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையை தற்பொழுது வெளியிட்டு இருக்கிறது. 

நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் பெரிய அளவில் பேட்டிங்கில் செயல்படாத போதும் பாபர் அசாம் முதல் இடத்திற்கு பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில் புள்ளிகள் அதிகரித்து இருக்கிறது. அவர் பாபர் அசாமை நெருங்கிக் கொண்டிருக்கிறார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான, உள்நாட்டில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், சிறப்பாக செயல்பட்டு தொடரை கைப்பற்றிய, தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் மூன்று பேர் முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கிறார்கள்.

அதன்படி பாபர் ஆசாம் 857 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஷுப்மன் கில் 814 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும்,தென் ஆப்பிரிக்காவின் ரஸ்ஸி வேண்டர் டூசன் 743 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இதில் இந்திய வீரர்கள் விராட் கோலி எட்டாம் இடத்திலும், ரோஹித் சர்மா 10 ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.     

ஐசிசி ஓடிஐ பேட்டர்ஸ் தவரிசை: 

  • பாபர் அசாம் - பாகிஸ்தான் - 857 புள்ளிகள்
  • ஷுப்மன் கில் - இந்தியா - 814 புள்ளிகள்
  • ராஸி வான்டர் டுசென் - தென் ஆப்பிரிக்கா - 743 புள்ளிகள்
  • இமாம் உல் ஹக் - பாகிஸ்தான் - 728 புள்ளிகள்
  • ஹாரி டெக்டர் - அயர்லாந்து - 726 புள்ளிகள்
  • டேவிட் வார்னர் - ஆஸ்திரேலியா - 720 புள்ளிகள்
  • குயின்டன் டிகாக் - தென் ஆப்பிரிக்கா - 714 புள்ளிகள்
  • விராட் கோலி - இந்தியா - 708 புள்ளிகள்
  • ஹென்றிச் கிளாசென் - தென் ஆப்பிரிக்கா - 698 புள்ளிகள்
  • ரோஹித் சர்மா - இந்தியா - 696 புள்ளிகள்
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News