வங்கதேச அணி தற்சமயம் ஆஃப்கானிஸ்தானுடன் ஐக்கிய அரபு ஆமீரகத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் ஸத்ரான் - செதிகுல்லா அடல் இணை தொடக்கம் கொடுத்தனர்.

Advertisement

இதில் சிறப்பாக தொடங்கிய செதிகுல்லா அடல் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 23 ரன்களில் ஆட்டமிழக்க,  3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 38 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய தாராகில் ஒரு ரன்னிலும், தார்விஷ் ரசூலி 14 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் - முகமது நபி இணை அணியை வலுவான நிலையை நோக்கி அழைத்துச் சென்றனர். 

Advertisement

இதில் இறுதிவரை களத்தில் இருந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 19 ரன்களையும், முகமது நபி 20 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் நசும் அஹ்மத் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் தன்ஸித் ஹசன் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமன் ஆகியோர் தலா 2 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் களமிறங்கிய சைஃப் ஹசனும் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜக்கர் அலி - ஷமிம் ஹொசைன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஜாக்கர் அலி 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 32 ரன்களையும், ஷமிம் ஹொசைன் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 33 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய நுருல் ஹசன் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

Also Read: LIVE Cricket Score

மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நுருல் ஹசன் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் வங்கதேச அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஷொரிஃபுல் ஹசன் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News