இங்கிலாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 2-1 கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது.

Advertisement

இதையடுத்து இங்கிலாந்து டெஸ்ட் அணியானது அடுத்ததாக நவம்பர் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நவம்பர் 28ஆம் தேதி கிறிஸ்ட்சர்ஜிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 06ஆம் தேதி வெல்லிங்டனிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறவுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 16 பேர் அடங்கிய் இங்கிலாந்து டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அந்தவகையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுக வீரர் ஜேக்கப் பெத்தெலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஜெக்கப் பெத்தெல் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்கொண்டு இந்த டெஸ்ட் தொடரில் ரெஹான் அஹ்மத் மற்றும் ஜோர்டன் காக்ஸ் ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியிலும் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் குழந்தை பிறப்பு காரணமாக ஜேமி ஸ்மித் இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கவில்லை. மற்றபடி நட்சத்திர வீரர்கள் அனைவரும் தங்கள் இடத்தை தக்கவைத்துள்ளனர். 

இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கே), ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஜாக் லீச், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

நியூசிலாந்து vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

  • முதல் டெஸ்ட் போட்டி - நவம்பர் 28 - டிசம்பர் 02 - கிறிஸ்ட்சர்ஜ்
  • இரண்டாவது டெஸ்ட் போட்டி - நவம்பர் 06 -10 - வெல்லிங்டன்
  • மூன்றாவது டெஸ்ட் போட்டி - நவம்பர் 14-18 - ஹாமில்டன்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News