ஐசிசியின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் 55 ஆட்டங்களை கொண்டது. இந்த நிலையில் வரவுள்ள டி20 உலக கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வேண்டும் என்று வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரைன் லாரா விருப்பம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் (50 ஓவர்) இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. அபாரமாக விளையாடி முக்கியமான ஆட்டத்தில் தோல்வி ஏற்படுவது சில சமயங்களில் நடக்கும். விராட் கோலி, ரோஹித் சர்மா அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்களது அனுபவத்துக்கு மாற்று இல்லை. வெஸ்ட்இண்டீஸ் ஆடுகளங்களை நன்கு அறிந்தவர்கள். சிறப்பாக விளையாடக் கூடியவர்கள்.

Advertisement

இதனால் 20 ஓவர் உலக கோப்பையில் அவர்கள் விளையாட வேண்டும். அவர்களை அணியில் சேர்க்க வேண்டும். இந்தியா எந்த அணியை தேர்வு செய்தாலும் ஒரு வலிமையான சக்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதேநேரத்தில் கோலியும், ரோகித் சர்மாவும் ஜாம்பவான்கள். அவர்களை எளிதில் நிராகரித்துவிட இயலாது” என தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை அரைஇறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்தப் போட்டியில் இருந்து ரோகித் சர்மாவும், விராட் கோலியும் 20 ஓவர் அளவில் இடம் பெறவில்லை. ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட இளம் வீரர்களை கொண்டு 20 ஓவர் அணி பரிசோதிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News