இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. நடைபெற்று முடிந்த இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது வரும் ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் கொழும்புவில் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இலங்கை சென்றுள்ள இந்திய வீரர்கள் தங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் வலைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ரோஹித் சர்மாவுடன் கலந்தாலோசித்தார். ஏனெனில் ஸ்ரேயாஸ் ஐயரின் மிகப்பெரும் பலவீனமாக பார்க்கப்படுவது அவரது ஷார்ட் பால் ஷாட் தேர்வு தான். ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக தடுமாறுவதுடன், அதில் விக்கெட்டுகளையும் இழந்துள்ளார்.
அதேசமயம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவோ ஷார்ட் பந்துகளை மிகவும் விரும்பக்கூடிய ஒருவராக சர்வதேச அளவில் திகழ்கிறார். மேலும் உலகின் மிகச்சிறந்த ஷார்ட் பால் பிளேயராகவும் ரோஹித் சர்மா விளங்குகிறார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் தனக்குள்ள பலவீனம் குறித்து ரோஹித் சர்மாவிடம் கேட்டறிந்துள்லார். அதேசமயம் ரோஹித் சர்மாவும் ஸ்ரேயாஸ் ஐயருக்கான ஆலோசனைகளை வழங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்ஸர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
இலங்கை ஒருநாள் அணி: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீரா சமர்விக்ரமா, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியானகே, நிஷான் மதுஷ்க, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லலாகே, சாமிகா கருணாரத்ன, மஹீஷ் திக்ஷனா, அகிலா தனஞ்செயா, தில்ஷன் மதுஷங்கா, மதீஷா பதிரானா, அசிதா ஃபெர்னாண்டோ.
இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர் அட்டவணை
- முதல் ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 02 - கொழும்பு
- இரண்டாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 04 - கொழும்பு
- மூன்றாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 07 - கொழும்பு