தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

Advertisement

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தா அணியில் காம்ரன் குலாம் அரைசதம்  கடந்த நிலையில் மற்ற வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாஅமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் ஓரளவு தாக்குப்பிடித்து 54 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Advertisement

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஐடன் மார்க்ரம் 89 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அறிமுக வீரர் கார்பின் போஷ் 81 ரன்களையும் சேர்த்தனர். மேற்கொண்டு டெம்பா பவுமா 31, பெட்டிங்ஹாம் 30 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 301 ரன்களைக் குவித்த நிலையில் ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் குர்ராம் ஷஷாத், நசீம் ஷா ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனால் 92 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்களை எடுத்துள்ளது. இதில் பாபர் ஆசாம் 16 ரன்களுடனும், சௌத் ஷகீல் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் மார்கோ ஜான்சென் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 2 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய கார்ப்ன் போஷ் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் அரைசதமும் கடந்து சாதனை படைத்துள்ளார். அதன்படி, தென் ஆப்பிரிக்காவின் 135 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் பந்துவீச்சில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களையும் எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை கார்பின் போஷ் படைத்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

மேற்கொண்டு அவர் இப்போட்டியில் தனது அரை சதத்தை 46 பந்துகளில் பூர்த்தி செய்தார், இது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஒருவர் டெஸ்ட் அறிமுகத்தில் அடித்த அதிவேக அரை சதமாகும். இது தவிர, 9ஆவது இடத்தில் பேட்டிங் செய்யும் போது தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடிய சாதனையையும் கார்பின் போஷ் செய்துள்ளார். இதற்கு முன் இலங்கையின் மிலன் ரத்நாயக்க இந்தாண்டு இங்கிலாந்துக்கு எதிராக 72 ரன்களைச் சேர்த்ததே சாதனையாக இருந்தது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News