12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணியில் தொடக்க வீரர் எவின் லூயிஸ் 2 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் - கைல் மேயர்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த இருவரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்து அசத்திய நிலையில், இரண்டாவது விக்கெட்டிற்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 60 ரன்களை எடுத்த நிலையில் கைல் மேயர்ஸ் தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அடுத்து களமிறங்கிய ரைலீ ரூஸோவும் 20 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்து அதிரடி காட்டிய ஆண்ட்ரே ஃபிளெட்சர் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 93 ரன்களைக் குவித்து தனது விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பேட்ரியாட்ஸ் அணியானது 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களைக் குவித்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியிலும் தொடக்க வீரர் கேசி கார்டி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த ஜேசன் ராய் மற்றும் நிக்கோலஸ் பூரன் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அசத்தியதுடன் தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்தனர். அதன்பின் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேசன் ராய் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய் டிம் டேவிட்டும் ஆன்ரிச் நோர்ட்ஜே பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து 9 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

இறுப்பினும் இறுதிவரை அதிரடியாக விளையாடி வந்த நிக்கோலஸ் பூரன் 6 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 93 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 18.3 ஓவச்ர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News