டேவிட் வார்னரின் வாழ்நாள் தடையை நீக்கியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

Updated: Fri, Oct 25 2024 10:02 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்டவர் டேவிட் வார்னர். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இருப்பினும் உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் தொடர்களில் விளையாட ஆர்வமுடன் இருப்பதாகவும் அவர் சமீபத்தில் கூறினார்.

முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் குற்றஞ்சாட்டப்பட்டு, அதற்காக விளையாட தடையும் பெற்றார். அதன்படி அந்த போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித், அணியின் துணைக்கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 

இதில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு கேப்டனாக செயல்பட வாழ்நாள் தடையையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்திருந்தது. இதனால் கேப்டன் பதவியை இழந்த ஸ்டீவ் ஸ்மித் அதன்பின், அணியில் சாதாரன வீரராக மட்டுமெ விளையாடி வந்த நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் அவரின் தடை நீக்கப்பட்டு ஆஸ்திரேலிய அணிக்கு அவ்வபோது கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 

ஆதேசமயம் மறுபக்கம் டேவிட் வார்னர் மீதான தடையானது தொடர்ந்தது. இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இன்று நீக்கியுள்ளது. அந்தவகையில் நடத்தை ஆணையத்தின் பரிசீலனைக்குப் பிறகு, ஆறரை ஆண்டுகளாக நீடித்து வந்த இந்தத் தடையை நீக்க முடிவு செய்யப்பட்டடுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணையக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தடை விதிக்கப்பட்டதிலிருந்து வார்னரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. அவர் கணிசமான மாற்றத்தை எதிர்கொண்டதாக தெரிகிறது. உதாரணமாக அவர் போட்டிகளின்போது ஸ்லெட்ஜ் செய்யவோ அல்லது எதிர் அணியைத் தூண்டிவிடவோ முயற்சிக்கவோ இல்லை. மேலும்  2018ஆம் ஆண்டு நடந்ததைப் போன்ற எந்த நடத்தையிலும் ஈடுபட மாட்டார் என்பதில் இக்குழு திருப்தி அடைந்துள்ளது. இதன் விளைவாக அவர் இனி கேப்டன் பதவி பெற தகுதி பெற்றுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலாம் டேவிட் வார்னர் இப்போது எதிர்வரும் பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியின் கேப்டனாகும் வாய்ப்பை பெற்றுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியாவைத் தவிர, வார்னர் உலகின் பல டி20 லீக்குகளில் பல்வேறு அணிகளுக்கு கேப்டனாக இருந்தார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்காது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை