ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் முதல் போட்டியிலேயே ரசிகர்களை கவரும் வகையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Advertisement

அதேசமயம் கோப்பையை வெல்வதற்காக பிற அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் தங்களது முதல் கோப்பையை வெல்லு முனைப்புடன் இத்தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதற்காக அந்த அணி வீரர்கள் தீவிர பயிசியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடப்பு சீசனுக்கான லக்னோ அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்துவீச்சாளர் டேவிட் வில்லி முதல் சில போட்டிகளை தவறவிடுவார் என அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து மார்க் வுட் விலகியுள்ளார். அதேசமயம் டேவிட் வில்லியும் முதல் சில போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் தான். இதனால் தற்போதுள்ள லக்னோ அணி அனுபவமில்லாத பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் கடந்த சில நாள்களாக மீதமுள்ள வீரர்களின் செயல்படாடுகள் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் திறமை அபாரமானதாக இருக்கிறது. இதனால் எங்களுக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேவிட் வில்லி ஐஎல்டி20 லீக் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போன்ற தொடர்களில் அடுத்தடுத்து பங்கேற்று வந்ததால், குடுப்பத்தினருடன் சில காலம் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் முதல் சில் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலத்தில் டேவிட் வில்லியை அவரது அடிப்படை தொடக்கையான ரூ.2 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், தேவ்தத் படிக்கல், ஆயுஷ் பதோனி, ஆஷ்டன் டர்னர், தீபக் ஹூடா, கிருஷ்ணப்பா கௌதம், க்ருனால் பாண்டியா, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், பிரேராக் மன்காட், யுத்வீர் சிங் சரக், டேவிட் வில்லி, அர்ஷின் குல்கர்னி, அர்ஷத் கான், ஷமார் ஜோசப், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், அமித் மிஸ்ரா, நவீன் உல் ஹக், ஷிவம் மாவி, மணிமாறன் சித்தார்த்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News