டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை தொடங்கும் அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணியும், இங்கிலாந்து இந்தியா அணியும் பல பரிட்சை நடத்துகின்றன. இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி ஐந்து போட்டிகளில் விளையாடி 246 ரன்களை அடித்திருக்கிறார்.

Advertisement

இதேபோன்று சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதனால் 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பையில் வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு தற்போது கிடைத்திருப்பதாக ரசிகர்கள் நம்பி வருகின்றனர். எனினும் பலம் வாய்ந்த இங்கிலாந்தனையை விரித்தினால் மட்டுமே இந்தியாவுக்கு இறுதிப் போட்டி செல்ல முடியும்.

Advertisement

இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களுடன் பேசிய டிவில்லியர்ஸ், “இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இந்தியாவுக்கு இருக்கும். இதில் மட்டும் இந்தியா வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் தான் மோதிக் கொள்வார்கள்.

அதில் இந்தியா நிச்சயம் வெற்றி பெற்று, டி20 உலக கோப்பையை கைப்பற்றும். இந்திய அணியின் பேட்டிங் பலமாக இருக்கிறது. நட்சத்திர வீரர்கள் பலரும் பார்மில் இருக்கிறார்கள். சூரிய குமார் யாதவ் விராட் கோலி ஆகியோர் நன்றாக விளையாடிய வருவது இந்திய அணிக்கு நிச்சயம் நல்ல விஷயம் தான்.

ரோஹித் சர்மாவை பொறுத்தவரை அவரும் முக்கியமான ஆட்டத்தில் பார்முக்கு திரும்பி ரன்களை குவிப்பார் என நம்பிக்கை இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி ஒரு முறை கூட வென்றதில்லை. இந்த நிலையில் டிவில்லியர்ஸ், இந்தியா நியூசிலாந்து இறுதி போட்டியில் எதிர்கொண்டு கோப்பையை வெல்லும்” என்று கூறியிருக்கிறார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News