இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன், ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் மேத்யூ ஷார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேத்யூ ஷார்ட் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களைச் சேர்த்த நிலையில் மிட்செல் மார்ஷும் தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமரூன் க்ரீன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கேமரூன் க்ரீன் 42 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னேவும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் 60 ரன்களில் ஸ்டீவ் ஸ்மித்தும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி மற்றும் கிளென் மேக்ஸ்வெல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவரும் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் கிளென் மேக்ஸ்வெல் 30 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் கேரி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் அலெக்ஸ் கேரியுடன் இணைந்த ஆரோன் ஹார்டியும் அதிரடியாக விளையாடி வந்த நிலையில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

ஆனாலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அலெக்ஸ் கேரி 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 77 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியானது 50 ஓவர்கள் மிடிவில் 7 விக்கெட்டுகளை இழந்தாலும், 304 ரன்களைக் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், பிரைடன் கார்ஸ், ஜேக்கப் பெத்தெல், வில் ஜேக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News