Joe Root Record: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Advertisement

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜூலை 2ஆம் தேதி பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது. 

Advertisement

இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிக்கு அருகில் இருந்து தோல்வியைத் தழுவிய இந்திய அணி இப்போட்டியில் எவ்வாறு கம்பேக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியின் ம்மூலம் ​​இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிறந்த சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

அதன்படி இப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் ஜோ ரூட் அரைசதம் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் சமன்செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 68 அரைசதங்களை அடித்ததே இதுநாள் வரை சாதனையாக உள்ளது. அதேசமயம் ஜோ ரூட் தற்போது வரையிலும் 66 அரைசதங்களை அடித்து இப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள்

  • சச்சின் டெண்டுல்கர் - 68
  • ஜோ ரூட் - 66
  • ஷிவ் நாராயண் சந்தர்பால் - 66
  • ஆலன் பார்டர் - 63
  • ராகுல் டிராவிட் - 63

இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.

Advertisement

Also Read: LIVE Cricket Score

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News