பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் 556 ரன்கலைக் குவித்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 151 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 102 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் 104 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 78 ரன்களில் விக்கெட்டைஇழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் டக்கெட்டும் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 84 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.  ஆனாலும் இப்போட்டியில் அபாரமாக விளையடி வந்த ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 35ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

அதேசமயம் அவருடன் இணைந்து அதிரடியாக விளையாடி வந்த ஹாரி புரூக்கும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 492 ரன்களைக் குவித்துள்ளது. இதில் ஜோ ரூட் 176 ரன்களுடனும், அதிரடியாக விளையாடி வரும் ஹாரி புரூக் 141 ரன்களுடனும் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டியில் ஹாரி புரூக் சதமடித்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் அவர் இந்திய அணியின் நடத்திர வீரர்களான விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி வரும் விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் 4 சதங்களை மட்டுமே அடித்துள்ள நிலையில், ஹாரி புரூக் அவர்களை முந்தியுள்ளார். 

மேற்கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5 சதங்களை அடித்த வீரர்கள் பட்டியளில் 6ஆவது வீரராக ஹாரி புரூக் இணைந்துள்ளார். அதேசமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 17 சதங்களை விளாசி முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷாக்னே 11 சதங்களுடன் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 10 சதங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். 

Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஐந்து சதங்கள் அடித்த பேட்டர்கள்

  • கமிந்து மெண்டிஸ் (இலங்கை) – 5 சதங்கள் (13 இன்னிங்ஸ்)
  • ஹாரி புரூக் (இங்கிலாந்து) - 5 சதங்கள் (26 இன்னிங்ஸ்)*
  • டேரில் மிட்செல் (நியூசிலாந்து) - 5 சதங்கள் (35 இன்னிங்ஸ்)
  • அப்துல்லா ஷஃபிக் (பாகிஸ்தான்) – 5 சதங்கள் (37 இன்னிங்ஸ்)
  • ஷுப்மன் கில் (இந்தியா) - 5 சதங்கள் (50 இன்னிங்ஸ்)
  • டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 5 சதங்கள் (68 இன்னிங்ஸ்)

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News