Gus Atkinson added to England Squad: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் சேர்க்கப்பட்டுள்ளார். 

Advertisement

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது வரையிலும் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதந்தவகையில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. 

Advertisement

இதனையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜூலை 10ஆம் தேதி கிரிக்கெட்டின் தாயகம் என்றழைக்கப்படும் லாண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கிசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அட்கிசன் 3 ஐந்து விக்கெட் ஹாலுடன் 55 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் ஒரு சதத்துடன் 352 ரன்களையும் சேர்த்துள்ளார். 

இதன்மூலம் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் ஜோஃப்ரா ஆர்ச்சரும் அணியில் இருப்பதால் அவருக்கும் மூனறாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுத்து. ஒருவேளை இவர்கள் இருவரும் ஒரு சேர பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு துறை வலிமை பெறுவதுடன், பின் வரிசை பேட்டிங்கும் வலுப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன்

Also Read: LIVE Cricket Score
Advertisement

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News