England vs South Africa Playing XI: இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறும் நிலையில், இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடரும், அடுத்ததாக டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. அதன்படி முதல் ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்கும் இரு நாட்டு பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டது. ஹாரி புரூக் தலைமையிலான இந்த அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் சோனி பெக்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், வில் ஜேக்ஸ் ஆகியோருடன் பிரைடன் கார்ஸுக்கும் லெவனில் இடம் கிடைத்துள்ளது. 

மறுபக்கம் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் பெரிதளவில் எந்த மாற்றும் இன்றி, ஆஸ்திரேலியாவுடன் விளையாடிய அதே லெவனுடன் களமிறங்குகிறது. இதன் மூலம் டோனி டி ஸோர்ஸி, டெவால்ட் பிரீவிஸ் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர். மேற்கொண்டு கேசவ் மஹாராஜ், ஐடன் மார்க்ரம், லுங்கி இங்கிடி, நந்த்ரே பர்கர், வியான் முல்டர் ஆகியோரும் தங்களின் இடங்களை உறுதிசெய்துள்ளனர். 

தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி சோர்ஜி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் ப்ரெவிஸ், வியான் முல்டர், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், நந்த்ரே பர்கர், லுங்கி இங்கிடி.

Also Read: LIVE Cricket Score

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சோனி பேக்கர்.

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News