இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்ற்பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Advertisement

இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

Advertisement

இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் முதலிடத்திற்கு முன்னேறி சாதனைப்படைத்துள்ளார். முன்னதாக இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது ஹாரி புரூக் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இந்த பட்டியளில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மூன்றாம் இடத்திலும், இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் 4ஆம் இடத்தில் நீடிக்கின்றனர். 

அதேசமயம் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் 5ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். மேற்கொண்டு இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் 6ஆம் இடத்திற்கும், தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா 7ஆம் இடத்திற்கும் முன்னேறியுள்ள நிலையில், இந்திய வீரர் ரிஷப் பந்த் மூன்று இடங்கள் பின் தங்கி 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

மேற்கொண்டு இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி ஆறு இடங்கள் பின் தங்கி 20ஆம் இடத்திற்கும், ரோஹித் சர்மா 31ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியளின் முதல் நான்கு இடங்களி எந்த மாற்றமும் நிகழவில்லை. இதில் முதலிடத்தில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா உள்ள நிலையில், இரண்டாம் இடத்தில் காகிசோ ரபாடாவும், மூன்றாம் இடத்தில் ஜோஷ் ஹேசில்வுட்டும் தொடர்கின்றனர்.

அதேசமயம் இப்போட்டியில் நான்காம் இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு இடம் பின் தங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒரு இடம் முன்னேறி 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா, நாதன் லையன், இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா 8ஆம் இடத்திலும் தொடரும் நிலையில், கடந்த வாரம் 9ஆம் இடத்தில் இருந்த மார்கோ ஜன்சென் 12அம் இடத்திற்கு பின் தங்கியுள்ளார். 

Advertisement

இதுதவிர்த்து டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையிலும் பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் நீடிக்கும் நிலையில், வ்ங்கதேச அணியின் மெஹிதி ஹசன் மிராஸ் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் கரணமாக இரண்டாம் இடத்தில் இருந்த மார்கோன் ஜான்சென் 3 இடங்கள் பின் தங்கி 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்ஸர் படேல் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News