இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்தொடருக்கு தயாராகும் வரையில் இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளனர். 

Advertisement

இதில் அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோருக்கு மட்டும் பிசிசிஐ ஓய்வு வழங்கியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் எம் எஸ் தோனி, விராட் கோலி ஆகியோருடன் தற்போதுள்ள் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பாணியை ஒப்பிட்டு பேசியுள்ளார். 

Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் இந்த மூன்று கேப்டன்களின் கீழும் விளையாடியுள்ள அஷ்வின், ரோஹித்தின் தலைமைத்துவத்தை தனித்து நிற்கும் தனித்துவமான பண்புகளைப் பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து அஸ்வின் கூறுகையில், “ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் 2-3 விஷயங்கள் நன்றாக உள்ளன. அவர் எப்போதும் அணியின் சூழலை வெளிச்சமாக வைத்திருப்பார். அதை இலகுவாக வைத்திருக்க முயற்சி செய்கிறார். மேலும் அவர் மிகவும் சீரானவராகவும், திட்டங்களை வகுப்பதில் வலிமையானவராகவும் உள்ளார்.

அதுவே அவரது பலம். இருப்பினும் அவர் எப்போதும் அணியின் சூழலை இலகுவாக வைத்து வீரர்களை ஆதரிப்பார். ஏதேனும் பெரிய போட்டி இருந்தால், பகுப்பாய்வுக் குழு, பயிற்சியாளர் ஆகியோருடன் அமர்ந்து ரோஹித் சர்மா அதற்குத் தயாராகிறார். அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேனின் பலவீனம் என்ன, ஒரு பந்து வீச்சாளரின் திட்டம் என்ன என்பது குறித்து அவர் திட்டங்களை வகுப்பார். மேலும் அவர் தேர்வு செய்யும் வீரர்களை தொடர்ந்து ஆதரிப்பார். 

அதிலும் அவர் பிளேயிங் லெவனில் ஒரு வீரரைத் தேர்வு செய்தால் அந்த வீரருக்கு 100 சதவீதம் அதாரவை வழங்குவார். எனது கேரியரின் பெரும்பகுதியை இந்த மூன்று கேப்டன்களுடன் விளையாடியுள்ளேன். அதில் தோனி மற்றும் விராட் இருவரும் திட்டங்கள் வகுப்பத்தில் வலுவாக இருந்தாலும், ரோஹித் சர்மா அதில் அதிகம் கவனம் செலுத்தி திட்டங்களை முறையாக செயல்படுத்தியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News