ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய எமிரேட்ஸ் அணிக்கு ஆண்ட்ரே ஃபிளெட்சர் மற்றும் முகமது வசீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபிளெட்சர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நிலையில், மற்றொரு தொடருக்க வீரரான முகமது வசீம் 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஃபிளெட்சருடன் இணைந்த டாம் பான்டன் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 198 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

Advertisement

இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் பான்டன் தனது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதன்பின் 9 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 105 ரன்களைச் சேர்த்த நிலையில் பான்டன் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ஃபிளெட்சர் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 96 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 228 ரன்களைக் குவித்தது. வைப்பர்ஸ் அணியில் முகமது அமீர் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். 

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு ஃபகர் ஸமான் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 7 ரன்களை எடுத்த நிலையில் ஃபகர் ஸமானும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய டேனியல் லாரன்ஸ் 9 ரன்களுக்கும், கேப்டன் சாம் கரண் 11 ரன்களுக்கும், அஸாம் கான் 12 ரன்களுக்கும், ஆடாம் ஹோஸ் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டும் 7 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 12.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எமிரேட்ஸ் அணி தரப்பில் முகமது ரோஹித் கான், அல்ஸாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் எமிரேட்ஸ் அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் வைப்பர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News