தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 03) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்வுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்தார்.

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் ஐடன் மார்க்ரம் 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வியான் முல்டர் 5 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது.

Advertisement

அதன்பின் ரியான் ரிக்கெல்டனுடன் இணைந்துள்ள கேப்டன் டெம்பா பவுமா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இதில் ரியான் ரிகெல்டன் தனது சதத்தையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். மறுபக்கம் கேப்டன் டெம்பா பவுமா சதத்தை நோக்கி நகர்ந்து வருகிறார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி தற்போது வரை 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 269 ரன்களைச் சேர்த்துள்ளது.

இந்நிலையில் இப்போடியின் போது பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் சைம் அயூப் காயமடைந்து களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்படி இன்னிங்ஸின் 7ஆவது ஓவரின் போது ரியான் ரிக்கெல்டன் அடித்த பந்தை தடுக்கும் முயற்சின் போது அவர் தனது காலில் பலத்த காயத்தை சந்தித்தார். அதன்பின் அவர் ஸ்ட்ரெச்சரில் மைதானத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

இந்நிலையில் சைம் அயூபின் காயம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. பாகிஸ்தான் அணியின் இளம் அதிரடி வீரரான சைம் அயூப் காயமடைந்துள்ளதன் காரணமாக, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை உட்பட தேசிய அணிக்கான தற்போதைய டெஸ்ட் மற்றும் வரவிருக்கும் போட்டிகளில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், வியான் முல்டர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா(கே), டேவிட் பெட்டிங்ஹாம், கைல் வெர்ரைன், மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, குவேனா மபாகா

Advertisement

பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: ஷான் மசூத்(கே), சைம் அயூப், பாபர் ஆசாம், கம்ரான் குலாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் ஆகா, அமீர் ஜமால், மிர் ஹம்சா, குர்ரம் ஷஷாத், முகமது அப்பாஸ்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News