Yashasvi Jaiswal Records: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்காக அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இளம் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். 

Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்க்லேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து மன்னில் தன்னுடைய முதல் இன்னிங்ஸிலேயே சதத்தை விளாசி மிரட்டியுள்ளார். 

Advertisement

இந்நிலையில் இந்த சதத்தின் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி இன்னிங்கிலாந்து மன்னில் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்த ஏழாவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக சௌரவ் கங்குலி, முரளி விஜய், அப்பாஸ் அலி பெய்க் போன்ற ஜாம்பவான்கள் இங்கிலாந்தின் மன்னில் தங்களுடைய முதல் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்துள்ளனர்.

ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு படி மேலே சென்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் தன்னுடைய அறிமுக டெஸ்டில் சதத்தைப் பதிவுசெய்துள்ளார். இதன்மூலம் இதனைச்செய்த உலகின் முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் அவர் கடந்தாண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஜெய்ஸ்வாலின் 5வது சதம் இதுவாகும். இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில், ஷுப்மான் கில் மற்றும் விராட் கோலியுடன் சேர்ந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்ம 9 சதங்களை விளாசி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

WTC-ல் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்கள்

  • ரோஹித் சர்மா - 9 சதங்கள்
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 5 சதங்கள்*
  • சுப்மான் கில் - 5 சதங்கள்
  • விராட் கோலி - 5 சதங்கள்
Advertisement

இதுதவிர்த்து வெளிநாடுகளில் தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்த 4ஆவது வீரர் எனும் பெருமையையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இதில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் 15 சதங்களை விளாசி முதலிடத்திலும், கேஎல் ராகுல் 5 சதங்களுடன் இரண்டாம் இடத்திலும், வீரேந்திர சேவாக் 4 சதங்களுட்ன் மூன்றாம் இடத்திலும் உள்ள நிலையில், ரவி சாஸ்தி, வினோத் மன்கட் அகியோருடன் இணைந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் நான்காம் இடத்தை பிடித்துள்ளார். 

Also Read: LIVE Cricket Score

வெளிநாட்டு மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த இந்திய தொடக்க வீரர்கள்

  • சுனில் கவாஸ்கர் - 15 சதங்கள்
  • கே.எல். ராகுல் - 5 சதங்கள்
  • வீரேந்திர சேவாக் - 4 சதங்கள்
  • வினு மங்கட் - 3 சதங்கள்
  • ரவி சாஸ்திரி - 3 சதங்கள்
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 3 சதங்கள்*
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News