இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.

Advertisement

மழைக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியானது முடிவு எட்டபடாமல் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளும் இத்தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனிலையில் நீடித்து வருகின்றனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதில் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளது.

Advertisement

இந்நிலையில் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எதிரணி பேட்டர்களை தொடர்ந்து அழுத்ததிற்கு உள்ளாக்கி வருகிறார். இதுவரை இத்தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள ஜஸ்பிரித் பும்ரா 6 இன்னிங்ஸ்களில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். மேற்கொண்டு இத்தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. 

இந்நிலையில் எஞ்சியுள்ள போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா 12 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இருதரப்பு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக ஹர்பஜன் சிங் உள்ளார். அவர் கடந்த 2000/21ஆம் ஆண்டு நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒட்டுமொத்தமாக அவர் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இந்நிலையில் இத்தொடரில் கைவம் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 12 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் அவர் 33 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இருதரப்பு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் ஹர்பஜன் சிங்கின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பார்டர் - கவாஸ்கர் தொடரின் ஒரு பதிப்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்:

  • ஹர்பஜன் சிங் (2000/01)- 32 விக்கெட்டுகள்
  • ரவிச்சந்திரன் அஸ்வின் (2012/13)- 29 விக்கெட்டுகள்
  • பென் ஹில்ஃபென்ஹாஸ் (2011/12)- 27 விக்கெட்டுகள்
  • அனில் கும்ப்ளே (2004/05)- 27 விக்கெட்டுகள்
  • ரவிச்சந்திரன் அஷ்வின் (2022/23)- 26 விக்கெட்டுகள்
Advertisement

இந்திய டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கே), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா. 

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லையன், மிட்செல் மார்ஷ், ஜெய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News