இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 

Advertisement

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 325 ரன்களிலும், அதனைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 263 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. அதன்பின் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக 156 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டாகி, 219 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா சதமடித்து அசத்தினார். மேலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 127 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இலங்கை அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ஆனாலும் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. 

மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்திய பதும் நிஷங்கா ஆட்டநாயகன் விருதையும், தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ், ஜோ ரூட் ஆகியோர் தொடர்நாயகன் விருதையும் வென்றனர். இந்நிலையில் இத்தொடரில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலம் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டெஸ்ட்டில் புதிய சாதனையை படைத்துள்ளார். 

அந்தவகையில் ஜோ ரூட் கைப்பற்று 6ஆவது டெஸ்ட் தொடர்நாயகன் விருது இதுவாகும். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக தொடர் நாயகன் விருதை வென்ற வீரர் எனும் சதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். முன்னதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆண்ட்ரூ ஸ்டரிஸ், கிரஹாம் கூச் ஆகியோர் தலா 5 முறை தொடர் நாயகன் விருதை வென்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News