இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணியானது இரண்டிலும் வெற்றியைப் பதிவுசெய்து தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது கேப்டன் ஒல்லி போப்பின் அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 325 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஒல்லி போப் 154 ரன்களைக் குவித்தார். இலங்கை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிலன் ரத்நாயக்கே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் தனஞ்செயா டி சில்வா, பதும் நிஷங்கா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணியானது முதல் இன்னிங்ஸில் 263 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட், தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஜாக் காலிஸின் சாதனையை முறியடித்துள்ளார். அதன்படி, இப்போட்டியில் கமிந்து மெண்டிஸின் கேட்ச்சை பிடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்சுகளை பிடித்த வீரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். 

முன்னதாக இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஜேக்ஸ் காலிஸ் இருவரும் தலா 200 கேட்சுகளை பிடித்து மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது 201 கேட்ச்சுகளுடன் ஜோ ரூட் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் டெஸ்டில் அதிக கேட்சுகள் எடுத்த சாதனை ராகுல் டிராவிட் பெயரில் உள்ளது, அவர் 210 கேட்சுகளை எடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் மஹேல ஜெயவர்த்தனே 205 கேட்சுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News