அயர்லாந்து அணி தற்சமயம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று சில்ஹெட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங் மற்றும் கேட் கார்மைக்கேல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினர். இதில் 60 ரன்களைச் சேர்த்த நிலையில் பால் ஸ்டிர்லிங் தனது விக்கெட்டை இழக்க, 59 ரன்களில் கேட் கார்மைக்கேலும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய காம்பெர் 44 ரன்களிலும், லோர்கன் டக்கர் 41 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் ஜோர்டன் நெய்ல் 30 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் அயர்லாந்து அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை பேரி மெக்கர்த்தி 21 ரன்களுடன் தொடர்ந்தார். ஆனால் மற்ற வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், பேர் மெக்கர்த்தியும் 31 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

இதனால் அயர்லாந்து அணி 286 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன் 3 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்முத், தைஜுல் இஸ்லாம் மற்றும் ஹசன் முரத் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு மஹ்முதுல் ஹசன் - ஷதமான் இஸ்லாம் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

இதில் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 160 ரன்களைச் சேர்த்த நிலையில் ஷாத்மான் இஸ்லாம் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 80 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய மொமினுல் ஹக்கும் ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷாத்மான் இஸ்லாம் சதமடித்து அசத்தினார். மேலும் மொமினுல் ஹக்கும் அரைசதம் கடந்தார். 

Also Read: LIVE Cricket Score

இதன் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 338 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஷாத்மான் இஸ்லாம் 169 ரன்களையும், மொமினுல் ஹக் 80 ரன்களையும் சேர்த்துள்ளனர். இதனையடுத்து 52 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேச அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News