ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களது முதல் போட்டியில் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜூன் 05ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Advertisement

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் மோதியுள்ள போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும், அயர்லாந்து அணியும் சமீப காலங்களில் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருவதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. இந்நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி தொடக்க வீரராக விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து பேசிய மேத்யூ ஹைடன், “விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கி விளையாடவில்லை என்றால் அவரை அணியிலேயே சேர்க்க கூடாது. எப்போதுமே பிளேயிங் 11இல் வலது மற்றும் இடது கை பேட்டர்கள் இருக்கும் வகையில் பேட்டிங் வரிசையை அமைக்க வேண்டும். ஆனால், இந்திய அணியில் டாப் 5 வரிசையில் மொத்தமாகவே வலது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் வகையில் அணியை தேர்வு செய்தால், அது எதிரணிக்கு சாதமாக இருக்கும்.

அதன் காரணமாக ரோஹித் சர்மாவிற்கு பதிலாக நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலியை யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் தொடக்க வீரராக களமிறக்கி விளையாட வைக்க வேண்டும் . வேண்டுமானால் ரோஹித் சர்மாவை மிடில் ஆர்டரில் விளையாட வைக்கலாம். டி20 கிரிக்கெட்டில் 4ஆவது வீரராக களமிறங்கி விளையாடிய போது தான் ரோஹித் சர்மா அதிக ரன்களை குவித்திருக்கிறார். ஆதலால், அவரை மிடில் ஆர்டரில் களமிறக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News