ஐசிசி உலகக்கோப்பை 2023: கனவு அணியை அறிவித்த ஐசிசி; 5 இந்திய வீரர்களுக்கு இடம்!

Updated: Mon, Nov 20 2023 14:18 IST
Image Source: Google

இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவடைந்தது. இந்த தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் உள்ளடங்கிய கனவு அணியை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்த ஐசிசி கனவு அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இந்த அணியின் தொடக்க வீரர்களாக தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் மற்றும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

மிடில் வரிசையில் இந்திய வீரர்கள் விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோருடன் ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அணியில் இடம்கிடைத்துள்ளது. 

பந்துவீச்சாளர்களில் இந்திய வேகப்பந்து வீச்சளர்கள் முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருடன் இலங்கை அணியின் தில்ஷன் மதுஷங்காவும், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ஆடாம் ஸாம்பா ஆகியோருக்கும் இடம் கிடைத்துள்ளது. மேலும் 12ஆவது வீரராக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸிக்கு இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி கனவு அணி: குயின்டன் டி காக், ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, டேரில் மிட்செல், கேஎல் ராகுல், கிளென் மேக்ஸ்வெல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, தில்ஷன் மதுஷங்கா, ஆடம் ஜம்பா மற்றும் முகமது ஷமி.

12ஆவது வீரர்: ஜெரால்ட் கோட்ஸி

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை