நியூசிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் படுதோல்வியைச் சந்தித்திருந்தது. இதையடுத்து அந்த அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் அக்டோபர் 18ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடர் அக்டோபர் 26ஆம் தேதி முதலும் நடைபெற இருக்கிறது.

Advertisement

மேலும் இத்தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி புரூக் தொடர்கிறார். மேற்கொண்டு ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரண், பென் டக்கெட், ஜேமி ஸ்மித் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் இங்கிலாந்து டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காயம் காரணமாக ஆஸ்திரேலிய டி20 தொடரில் இருந்து விலகிய மிட்செல் சாண்ட்னர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளதுடன், கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர காயத்தால் ஆஸ்திரேலிய தொடரின் பாதியிலேயே வெளியேறிய ரச்சின் ரவீந்திராவுக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. 

இருப்பினும் நட்சத்திர வீரர்கள் ஃபின் ஆலன், கிளென் பிலீப்ஸ், ஆடம் மில்னே, லோக்கி ஃபெர்குசன் உள்ளிட்டோர் காயத்தில் இருந்து மீளாததால் இந்த தொடரையும் தவறவிட்டுள்ளனர். மேலும் பென் சீயர்ஸ், இஷ் சோதி இத்தொடரில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் நிலையில், டிம் செஃபெர்ட், ஜிம்மி நீஷம், ஜேக்கப் டஃபி, ஸக்காரி ஃபால்க்ஸ், கைல் ஜேமிசன் உள்ளிட்டோர் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.

நியூசிலாந்து டி20 அணி: மிட்செல் சாண்ட்னர்(கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ், மேட் ஹென்றி, பெவன் ஜேக்கப்ஸ், கைல் ஜேமீசன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், ராச்சின் ரவீந்திர, டிம் ராபின்சன், டிம் சீஃபர்ட்.

இங்கிலாந்து ஒருநாள் அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், சோனி பேக்கர், டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், சாம் கரன், லியாம் டாசன், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷீத், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், லூக் வுட்

Also Read: LIVE Cricket Score
Advertisement

இங்கிலாந்து டி20 அணி:ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அகமது, சோனி பேக்கர், டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஸாக் கிராலி, சாம் கரன், லியாம் டாசன், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷீத், பில் சால்ட், லூக் வுட்

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News