சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு கிரிக்கெட் தொடருக்கு பிறகு வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பாட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 

Advertisement

முன்னதாக கடந்த வாரம் சக அணி வீரர் ஹாரி புரூக் தன்னை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்திருந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ் போட்டியில் ஹாரி ப்ரூக் சோபிக்க தவறினார். இதன் காரணமாக ஜோ ரூட் மீண்டும் தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்த மாற்றங்களைத் தவிர்த்து டாப் 10 வரிசையில் வேறெந்த மாற்றமும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

இந்த டாப் 10 தரவரிசையில் இந்திய அணியைச் சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4ஆம் இடத்தையும், ரிஷப் பந்த் 9ஆம் இடத்தையும் தக்கவைத்து கொண்டுள்ளனர். டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்திலும், டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும் நீடித்து வருகின்றனர். 

இதுதவிர்த்து வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகீல் ஹொசைன், சர்வதேச டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆதில் ரஷித்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். மூன்னதாக இந்த பட்டியலில் 4ஆம் இடத்தில் இருந்த அகீல் ஹொசைன் தற்சமயம் 3 இடங்கள் முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் இங்கிலாந்தின் ஆதில் ரஷித் இரண்டாம் இடத்திற்கும்,  இலங்கை அணியின் வநிந்து ஹசரங்கா மூன்றாம் இடத்திற்கும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பா 4ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். இந்த பட்டியளில் இந்திய வீரர்கள் ரவி பிஷ்னோய் 2 இடங்கள் முன்னேறி 06ஆம் இடத்திற்கும், அர்ஷ்தீப் சிங் ஒரு இடம் முன்னேறி 08ஆம் இடத்திற்கும் முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்த்க்க்து. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News