இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றதுடன், இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது.

Advertisement

அதன்படி இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இலங்கை அணி சொந்த மண்ணிலேயே டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளதால், ஒருநாள் தொடரில் கம்பேக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

அதேசமயம் கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்படும் முதல் ஒருநாள் தொடரையும் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்றைய தினம் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் இணைந்து கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளியை பிசிசிஐ தங்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் கண்காணிப்பில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் பயிற்சியை மேற்கொள்வது பதிவாகியுள்ளது. மேலும் அதில் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சு பயிற்சியிலும் ஈடுபடுவதும் காட்சிப்படுத்தப்பட்டது. இதனால் இத்தொடரில் ஸ்ரேயஸ் ஐயரும் பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் போது ரியான் பராக், ரிங்கு சிங் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டனர். இதன் காரணமாக ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஸ்ரேயாஸ் ஐயரும், இத்தொடரில் ஒருசில ஓவர்கள் பந்துவீசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிசிசிஐ-யின் இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News