வங்கதேச அணி இம்மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதன்மூலம் வங்கதேச அணியானது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு தரப்பு தொடரில் விளையாடவுள்ளது. 

Advertisement

இதில் இலங்கை வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலேவில் ஜூன் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி கொழும்புவிலும், ஒருநாள் தொடரானது ஜூலை 2ஆம் தேதி முதலும், டி20 தொடரானது ஜூலை 10ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் இதில் ஒருநள் மற்றும் டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்பு, பல்லகலே, தம்புளா உள்ளிட்ட மைதானங்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

மேற்கொண்டு இலங்கை டெஸ்ட் தொடருக்கன வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதேசமயம் வங்கதேச ஒருநாள் மற்றும் டி20 அணிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த 12 மாதங்களுக்கு வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனாக நட்சத்திர ஆல் ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்படுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

முன்னதாக வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ செயல்பட்டு வந்த நிலையில், நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் அந்த அணியில் செயல்பாடுகள் பெரிதளவில் இல்லை. மேலும் நஜ்முல் ஹொசைனும் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததாக அறிவிப்புகள் வெளியான நிலையில் தான் தற்சமயம் மெஹிதி ஹசன் மிராஸ் வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

மெஹதி ஹசன் மிராஸ் இதுவரை 105 ஒருநாள் போட்டிகளில் 1617 ரன்களையும் 110 விக்கெட்டுகளையும் குவித்துள்ளார். முகமது ரஃபீக், மஷ்ரஃப் மோர்டாசா மற்றும் ஷகிப் அல் ஹசன் போன்ற ஜாம்பவான்களுடன் சேர்ந்து, ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வங்கதேச வீரர்கள் பட்டியலிலும் ஒரு அங்கமாக உள்ளார். இதையடுத்து எதிவரும் இலங்கை தொடர் முதல் மெஹிதி ஹசன் வங்கதேச அணியின் கேப்டனாக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News