இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எஸ் ஸ்ரீசாந்த். இந்திய அணி கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு இவரது பந்துவீச்சும் ஒரு காரணமாக அமைந்திருந்தது. மேற்கொண்டு இந்திய அணிக்காக கடந்த 2006ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

Advertisement

அதன்படி மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சோர்த்து ஸ்ரீசாந்த் 169 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்களுக்காக விளையாடியுள்ள இவர் 44 போட்டிகளில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் சூதாட்ட சர்ச்சையால் கிரிக்கெட் விளையாட தடையை சந்தித்த அவர், அதன்பின் குற்றவாளி இல்லை என்ற தீர்ப்புக்கு பிறகு மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

இந்நிலையில் தற்சமயம் தொலைக்காட்சி வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ஸ்ரீசாந்த், தனது ஆல் டைம் லெவன் அணியை (அமைதியான) தேர்வு செய்துள்ளார். இந்த அணியில் கவுதம் கம்பீர், விராட் கோலி அவர் இடம் கொடுதுள்ளார். த்தார். உண்மையில், இங்கே ஸ்ரீசாந்த், களத்தில் அதிக கோபத்தை வெளிப்படுத்தும் பதினொரு வீரர்களைக் கொண்ட ஒரு அணியை உருவாக்கியுள்ளார்.

அதன்படி ஸ்ரீசாந்த் தேர்வு செய்துள்ள இந்த அணியின் தொடக்க வீரர்களாக கௌதம் கம்பீர், விராட் கோலி ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ள அவர், மூன்றாம் வரிசையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்கை தேர்வு செய்ததுடன், இந்த அணியின் துணை கேப்டனாகவும் அவரையே நியமித்துள்ளார். மேற்கொண்டு நான்காம் வரிசை வீரராக முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலிக்கு வாய்ப்பு வழங்கிய அவர், அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளார்.

இந்த அணியின் 5ஆவது இடத்திற்கு பாகிஸ்தானின் ஷாகித் அஃப்ரிடியையும், ஆல் ரவுண்டராக வெஸ்ட் இண்டீஸின் கீரன் பொல்லார்டையும், வங்கதேச அணியின் ஷாகில் அல் ஹசனையும் தேர்வு செய்துள்ள ஸ்ரீசாந்த் அணியின் பந்துவீச்சாளர்களாக இந்தியாவின் ஹர்பஜன் சிங், பாகிஸ்தானி சோயப் அக்தர், தென் ஆப்பிரிக்காவின் ஆண்ட்ரே நெல் மற்றும் தன்னையும் அவர் இந்த அணியில் சேர்த்துக்கொண்டுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

ஸ்ரீசாந்த் அமைதியான ஆல் டைம் லெவன்: கவுதம் கம்பீர், விராட் கோலி, ரிக்கி பாண்டிங் (துணை கேப்டன்), சௌரவ் கங்குலி (கேப்டன்), ஷாகித் அஃப்ரிடி, ஷாகிப் அல் ஹசன், கீரன் பொல்லார்ட், ஹர்பஜன் சிங், சோயப் அக்தர், ஆண்ட்ரே நெல், ஸ்ரீசாந்த்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News