இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

இதையடுத்து இப்போட்டிக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளிற்கும் இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. 

Advertisement

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் நேற்றைய தினம் சென்னை வந்தடைந்தனர். இதனைடுத்து இன்று இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அதன்படி இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, கேல் ராகுல், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் தீவிர வலைபயிற்சியில் ஈடுப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, முதல் முறையாக இந்திய மண்ணில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதன் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் இந்திய அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மட்டுமின்றி, பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் மற்றும் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோரும் இந்த தொடர்களை ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்விக்குப் பிறகு இந்திய அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்போடு உள்ளனர். அதேசமயம் வங்கதேச அணியானது சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியதுடன், இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அந்த அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி உள்ளதால் இத்தொடரிலும் அந்த அணி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் , ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.

Advertisement

வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஸாத்மன் இஸ்லாம், ஜாகிர் ஹாசன், மோமினுல் ஹேக், முஸ்ஃபிக்கூர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹாசன் மிராஸ், ஜேக்கர் அலி, தஸ்கின் அகமது, ஹசன் மஹ்முத், நஹித் ராணா, தைஜுல் இஸ்லாம், மஹ்முதுல் ஹாசன் ஜாய், நயீம் ஹசன், காலித் அகமது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News