பாக்ஸிங் டே டெஸ்ட்: தீவிர பயிற்சியில் இந்திய அணி!
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.
மழைக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியானது முடிவு எட்டபடாமல் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளும் இத்தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனிலையில் நீடித்து வருகின்றனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதில் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளது.
மேலும் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதில் தொடக்க வீரராக விளையாடி வந்த நாதன் மெக்ஸ்வீனி அணியில் இருந்து நீக்கப்பட்டு மற்றொரு அறிமுக வீரரான சாம் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு காயம் காரணமாக விலகியுள்ள ஜோஷ் ஹேசில்வுட்டிற்கு பதிலாக ஜெய் ரிச்சர்ட்சனும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் திவீரமாக தயாராகி வருகின்றனர். அதன்படி இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனெனில் இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இந்திய அணி தோல்வியின்றி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பால், கூடுதல் அழுத்தமானது இந்திய அணி மீது உள்ளது.
மெற்கொண்டு அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், ரிஷப் பந்த் உள்ளிட்டோர் பேட்டிங்கில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். பந்துவீச்சில் பும்ரா ஒருபக்கம் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் மறுமுனையில் மற்ற பந்துவீச்சாளர்களால் சரிவர செயல்படமுடியாமல் தடுமாறி வருகின்றனர். இதனால் இப்போட்டியில் சோபிக்க வேண்டிய கட்டாயத்தினால் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியகியுள்ளன.
இந்திய டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கே), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லையன், மிட்செல் மார்ஷ், ஜெய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.