விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு அதரவு தெரிவித்த யுவராஜ் சிங்!
ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரார்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது செயல்பாடுகள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறியதன் காரணமாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவர் மீதும் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு மத்தியில் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அவர்களுக்கு ஆதரவளித்துள்ளார். அதிலும், இந்த இரண்டு வீரர்களும் இந்தியாவுக்காக நிறைய செய்துள்ளதாகவும், இத்தொடரில் அவர்களின் பேட்களில் இருந்து ரன்கள் வரவில்லை என்றாலும், அவர்கள் விரைவில் ஃபார்முக்கு திரும்புவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய யுவராஜ் சிங், “நாங்கள் எங்கள் சிறந்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவைப் பற்றி பேசுகிறோம். நாங்கள் அவர்களைப் பற்றி மிகவும் மோசமாகப் பேசுகிறோம். மக்கள் கடந்த காலத்தில் சாதித்ததை மறந்து விடுகிறார்கள். அவர் நம் காலத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களாவர். சரி, அவர்கள் தோற்றார்கள், அவர்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடவில்லை என்பது உண்மை தான். ஆனால் அதற்காக அவர்கள் நம்மை விட வருத்தப்படுவார்கள்.
மேலும் சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்வா அப்படி ஒரு முடிவை எடுத்தது ஒரு பெரிய விஷயம் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஒரு கேப்டனின் ஃபார்ம் சரியில்லாதபோது போட்டியில் இருந்து ஒதுங்கியதை நான் பார்த்ததில்லை. ரோஹித் சர்மா தன்னை விட அணியை முன்னிலையில் வைத்திருக்கும் முடிவு அவரது குணாதிசயத்தைப் பற்றி பேசுகிறது. அவர்கள் கிரிக்கெட்டில் சிறந்தவர்கள், அதனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
உண்மையில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்த மொத்தமாகவே 31 ரன்கலை மட்டுமே சேர்த்துள்ளார். மறுபக்கம் விராட் கோலி இத்தொடரின் முதல் போட்டியில் சதமடித்ததை தவிர்த்து மற்ற இன்னிங்ஸ்களில் சோபிக்க தவறினார். இதனால் இருவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.