ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. அதன்படி ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதனால் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்துவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

ஆனால் ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட வீரர்கள் நிச்சயம் இடம்பெறுவார்கள் என்ற நிலையில், மேலும் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக இத்தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வியும் தற்சமயம் எழுந்துள்ளது. 

Advertisement

ஏனெனில் கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வேறு எந்த சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடவில்லை. இதில் சமீபத்தில் நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் கூட முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த விராட் கோலி, மூன்றாவது டி20 போட்டியில் மட்டுமே விளையாடினர். 

அதன்பின் தற்போது நடைபெறும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விராட் கோலி விளையாடவுள்ளார். இதனால் ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

அதன்படி, நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடமில்லை என்பது தான். காரணம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் உள்ள மைதானங்கள் மிகவும் மொதுவான விக்கெட்டுகளாக இருக்கும் என்பதால், அங்கு விராட் கோலியால் பெரிதளவில் சோபிக்க முடியாது என்றும், இதனால் அவரை டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியிலிருந்து நீக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

Advertisement

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள விராட் கோலி, இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ள நிலையில், அவர் தொடரிலிருந்தே நீக்கப்படுவார் என வெளியாகியுள்ள தகவல் இந்திய ரசிகர்களுக்கு பெரும் இடியாக அமைந்துள்ளது. ஆனாலும் அவர் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு இதனை பொய்யாக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News