சுனில் நரைனை க்ளீன் போல்டாக்கிய டிரென்ட் போல்ட் - வைரலாகும் காணோளி!

Updated: Mon, Mar 31 2025 20:10 IST
Image Source: Google

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் விக்னோஷ் புதூர் மீண்டும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் கேகேஆர் அணியில் சுனில் நரைன் பிளேயிங் லெவனிற்கு திரும்பியுள்ளார். இதில் மும்பை இந்தியன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தது. 

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சுனில் நரைன் மற்றும் குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் முதல் ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். அப்போது ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட சுனில் நரைன், டிரென்ட் போல்ட்டின் அபாரமான யார்க்கர் பந்தை கணிக்க தவறியதுடன், இப்போட்டி ரன்கள் ஏதுமின்றி இரண்டாவது பந்திலேயே டக் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான குயின்டன் டி காக்கும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய கேப்டன் அஜிங்கியா ரஹானே 11 ரன்களுக்கும், வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டியுள்ளனர். இதனால் கேகேஆர் அணி முதல் 6 ஓவர்களுக்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் சுனில் நரைன் க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்: குயின்டன் டி காக், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே(கேப்டன்), ரிங்கு சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.

இம்பேக்ட் பிளேயர் - ரோஹித் சர்மா, கார்பின் போஷ், ராஜ் பாவா, ராபின் மிங்ஸ், சத்யநாராயண ராஜு

மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்டிக் பாண்டியா, நமன் திர், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், அஸ்வனி குமார், விக்னேஷ் புதூர்

Also Read: Funding To Save Test Cricket

இம்பேக்ட் பிளேயர் - அன்ரிச் நோர்ட்ஜே, அமித் ராய், மனிஷ் பாண்டே, வைபவ் அரோரா, லவ்னீத் சிசோடியா

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை