
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகலுக்கு இடையே விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாசை இழந்து, முதலில் பேட்டிங் செய்யதது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களிடம் கடந்த சில வருடங்களாகவே பிரச்சனை இருந்திருக்கிறது. இன்றைய போட்டியிலும் அந்த பிரச்சனை நீடித்தது.
முதல் ஓவர்லையே ஷுப்மன் கில் டக்அவுட் ஆகி வெளியேறினார். அதன்பிறகு வரிசையாக ரோகித் சர்மா(13), சூரியகுமார் யாதவ்(0), கேஎல் ராகுல்(9) ஆகியோர் மிச்சல் ஸ்டார்க்கிடம் அடுத்தடுத்த சில ஓவரில் ஆட்டம் இழந்தனர். ஹர்திக் பாண்டியாவும் உள்ளே வந்த வேகத்தில் வெளியேற பத்து ஓவர்களுக்குள் 49 ரன்களுக்கு 5 விக்கெடுகளை இழந்து படுமோசமான நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது.
கீழ் வரிசையில் ரவீந்திர ஜடேஜா(16) சிறிது நேரம் தாக்குப் பிடிக்க, அக்சர் பட்டேல்(29*) இறுதிவரை போராடியது எடுபடவில்லை. 117 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மிட்ச்சல் ஸ்டார்க் ஐந்து விக்கெட்களையும், சீன் அபாட் மூன்று விக்கெட்டுகளையும், நாதன் எல்லீஸ் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.