
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை (மார்ச் 9) நடைபெறவுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஒருவர் ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவும் பட்சத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்டரும், அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒருவேளை அவர் ஓய்வை அறிவிக்கவில்லை என்றாலும், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா விலகுவது உறுதி என்று கூறப்படுகிறது. ஏனென்றால், 2027 உலகக் கோப்பைக்கு புதிய கேப்டனை தயார் செய்ய இந்திய அணி விரும்புகிறது. இந்நிலையில் அவருக்கு பதிலாக இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.